|
கோயம்புத்தூர், மாநிலத்தில் மூன்றாவது பெரிய நகரம், தமிழ் நாட்டில் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம்,நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் முற்கால சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நுhற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை இராஷ்டிரகுட்டர்கள் , சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹோசைளர்கள் மற்றும் விஜயநகர பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. கொங்கு நாடு, தென்னிந்தியாவோடு பிரிட்டிஷாரின் கைகளில் விழுந்த பொழுது இதன் பெயர் கோயம்புத்தூர் என மாற்றப்பட்டது. தற்பொழுதும் இதே பெயரில் அழைக்கப்படுகிறது. தமிழில் இந்த ஊர் கோவை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின், மழை சாரல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு மனதிற்கு இதம் அளிக்கின்ற கால நிலை வருடம் முழுவதும் நிலவுகிறது. 25 கி.மீ நீளமுள்ள பாலக்காட்டு கணவாய் வழியாக வீசும் குளிர்ந்த காற்று இதன் பருவ நிலைக்கு காரணமாக அமைகிறது. இங்கு அதிகமாக உள்ள கரிசல் மண் இந்த பகுதியில் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் சிறந்து விழங்க ஒரு காரணியாக அமைந்துள்ளது. மேலும் இங்கு வெற்றிகரமாக விளங்கும் பருத்தி விளைச்சல், நெசவு தொழிற்சாலைகளுக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்க வழி செய்துள்ளது. முதல் நெசவு நூற்ப்பாலை 1888 ல் அமைக்கப்பட்டது. ஆனால் இங்கு இப்பொழுது நூற்றுக்கு அதிகமான நூற்ப்பாலைகள் இயங்கி வருகின்றது. இதன் விளைவாக நிலையான பொருளாதாரம் மற்றும் கோயம்புத்தூர் புகழ் மிக்க நூற்ப்பாலை நகரமாக உருவெடுக்க காரணமாக அமைந்தது. இங்கு 25000க்கு மேல் சிறு நடுத்தர பெரிய தொழிற்சாலைகள் மற்றும் நுhற்பாலைகள் உள்ளன. கோயம்புத்தூர் நீர் ஏற்றுக் குழாய் மற்றும் (Motor pump sets), இயந்திர பொறியமைப்பு கருவிகளின் சிறந்த உற்பத்தி மையமாக விளங்குகிறது. 1930ல் பைகாரா நீர்மின் திட்டம் செயல்பட தொடங்கியதன் காரணமாக கோயம்புத்தூர் நகரம் தொழில் வளர்ச்சியில் உச்சத்தை அடைந்தது.
கோயம்புத்தூர் மாவட்டம் அண்டை மாநிலமான கேரளத்திற்க்கும் புகழ்மிகுந்த உதக மண்டலத்த்திற்க்கும் நுழைவு மற்றும் முடிவு வாயிலாக அமைந்துள்ளது. மேட்டுப்பாளையத்திருந்து இயங்கும் புகழ்ப்பெற்ற மலை இரயில் இங்கிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து ஊட்டிக்கு வழக்கமான பேருந்து போக்குவரத்துகள் உள்ளன.
மலைவளம் :
இம்மாவட்டத்தின் தட்பவெட்ப நிலைக்கும் மழைக்கும் காரணமாக அமைவது இம்மாவட்டத்தைச்சுற்றியுள்ள மலைகளே ஆகும். இம்மாவட்டத்தின் தெற்கில் உள்ளது. ஆணைமலை, வடமேற்கில் குச்சும்மலை, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நீலகிரி மலை, வெள்ளியங்கிரி மலை உள்ளது. மற்றும் குமரிக்கல், புதுக்கல், அஞ்சநாடு பள்ளத்தாக்கு பொளாம்பட்டி மலைகள், ஆசனூர், பருகூர், பாலமலை, போன்ற மலைகள் உள்ளன. இம்மலைகளின் உயரம் 4000 அடிமுதல் 5000 அடி வரை உள்ளது, கடல் மட்டத்திலிருந்து 6000 அடிமுதல் 8000 அடிவரை உள்ளது.
வனவளம் :
கோயம்புத்தூர் மாவட்டத்தில் காடுகள் அடர்த்தியாகவும் சிறந்த உயர்ந்த மரங்களைக் கொண்டும் விளங்குகின்றன. இத்தகைய காடுகளை 8 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.1951 - ஆண்டிலிருந்து தனியாக வனத்துறை அமைக்கப்பட்டு காடுகள் பராமரிக்கப்படுகிறது. இம்மாவட்ட காடுகளின் எல்லை நீலகிரி மலை சரிவையும், மேற்கில் போலம்பட்டி தடாகம் பள்ளதாக்கு பகுதிகளில் உள்ள காடுகளையும், கிழக்கில் ஆணைமலை காடுகளையும் கொண்டுள்ளது. இதில் தேக்கு மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. பொள்ளாச்சி டாப்சிலிப் , ஆணைமலை , துணக்கடவு தொகுதிகள் என பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் மரங்கள் 150 அடி உயரம் வரை வளர்கின்றன. மூங்கில் பெரும்பான்மையாக கோவை மாவட்டத்திலேயே கொள்முதல் செய்யப்படுகின்றன.
கனிம வளம்:
இம்மாவட்டத்தில் குறிப்பிடதக்க கனிம வள இடங்கள் மிக, கருங்கல், சுண்ணாம்பு குவார்ட்ஸ் என்னும் பொருட்கள் சிறிய அளவில் கிடைக்கின்றன.இவைகளைக் கொண்டு மதுக்கரையில் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.
வேளாண்மை :
கோவை மாவட்டம் தலைசிறந்த தொழில் மாவட்டமாக விளங்கிய போதிலும், வேளாண்மையில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களைப் போல சிறந்து விளங்குகிறது.மொத்த நிலபரப்பில் 65 சதவிகிதம் விவசாயம் சாகுபடி செய்யப்படுகின்றன.
நெல், சோளம், கம்பு, ராகி, திணை, சாமை வரகு, முதலியவை சாகுபடி செய்யப்படுகின்றன.பயிறு வகைகளில் துவரை உளுந்து, கொள்ளு, மொச்சை, கடலை வகைகளும் சாகுபடி ஆகின்றன.பணப்பயிர்களான பருத்தி, நிலக்கடலை, புகையிலை, கரும்பு, தேங்காய் வாழை, மஞ்சள் போன்றவைகளும் பயிராகின்றன.பயிர் செய்யும் மொத்த நிலப்பரப்பில் 1,16,000 ஹெக்டர்கள்.
கோயம்புத்தூர் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை வட்டங்களில் அமராவதி, பவானி, ஆழியாறு, பாசன வசதியால் நெல் மிகுதியாக விளங்கிறது.
|